பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முருகவேள் திருமுறை 12. திருமுறை 44. மாயை அற விதியோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி யிளைஞோர்தம். விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை வினையாலே, இதமாகி யின்ப மதுபோத வுண்டு இனிதாளு மென்று மொழிமாதர். இருளாய துன்ப மருள் மாயை வந்து எனையீர்வ தென்றும் ஒழியாதோ, மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி வருமால முன்ைடு விடையேறி, மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் வருதேவ சம்பு தருபாலா; அதிமாய மொன்றி வருஆரர் பொன்ற அயில்வேல்கொ டன்று பொரும்வீரா. அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யு கந்த பெருமாளே. (29)

  • உந்தவிழி. உந்து அ விழி.

t ஒன்றி. உருவாகி நொந்து மொழி மாதர்' எனக்கூட்டுக.