பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 முருகவேள் திருமுறை (2- திருமுறை 47.* காட்சி பெற அந்தகன்வ ருத்தினம் பிறகிடச் சந்ததமும் வந்துகண் டரிவையர்க் கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள. 'அந்தியக லென்றிரண் டையுமொழித் திந்திரிய சஞ்சலங் களையறுத் தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச், "செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்

  • கந்தனை யறிந்தறிந் தறிவினிற் சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத சிந்தையுமவிழ்ந்தவிழ்ந்துரையொழித் தென்செயலழிந்தழிந்தழியமெய்ச் "சிந்தைவர என்று நின் தெரிசனைப் படுவேனோ, கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்

கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக் குன்றிடிய அம்பொனின் திருவரைக் கின்ைகிணி கிணின்கிணின் கிணினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்; தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான. அந்திபகல் - கேவலசகலம். 2. செந்திலை உணர்தல் - 18ஆம் பாடலின் கீழ்க்குறிப்பைப் பார்க்க. (பக்கம் 58) 3. கந்தனை - கந்தனாகிய நின்னை இஃது இடவழுவமைதி, 4. சிந்தை - அறிவு * மனப்பாடஞ் செய்ய வேண்டிய அருமைப் பாடல்களுள் இஃது ஒன்று.