பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 முருகவேள் திருமுறை (2 திருமுறை சங்கரி மனங்குழைந் துருகமுத் தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததிச கந்தொழுஞ் சரவணப் பெருமாளே. (32) 48. பாடி வாழச் செஞ் சொற்களைப் பெற அருணமணி மேவு பூவித ம்ருகமத படீர லேபன அபிநவ விசால பூரண அம்பொற் கும்பத் தனமோதி. அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் கிதமாகி; "இருணிறைய மோதி மாலிகை சருவி புற வான வேளையி லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் றழியாநீள். இரவுபகல் மோகனாகியெ படியில்மடி யாமல் மானுமுன் இணையடிகள் பாடி வாழன் னெஞ்சிற் செஞ்சொற் றருவாயே! தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் குழையாளர் தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் கருள்கூரும்;

  • இருள் நிறை அம் ஓதி ஓதி கூந்தல்