பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 145 58 இறுகிக் கட்டுக்கோப்பாய் இருந்த அழகு நீங்கித் தளர்ந்து, அங்கு இருந்து, முன்பு உதவிபுரிந்து வந்த ஐம்பொறிகளும் கலங் கிச் சிதறிப் போய்ப் பிணம் என்னும் நிலையை அடை ந்தவுடனே சிலர் வந்து பல்ல்க்கில் (பாடையில்) (பிண த்தை) எடுத்து (அல்லது பிணத்தைக் கூலிக்கு எடுத்துச்) சுமந்துபோகப், பெரிய பறைகள் முறைப்படிவெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென்ற ஒலியை எழுப்ப, மக்கள் ஒன்றுகூடிப் (பிணத்தைத்) தொடர்ந்தும், புரண்டும் வழி விடுகினற இந்தப் பொய் (வாழ்வை) விட்டு உன் திருவடிகளை அடையும் வழியை உணர மாட்டேனோ? பட்டு உருவும்படியாக (வேலாயுதத்தைச்).செ லுத்தி கொண்டிருந்த கிரெளஞ்சம்ல்ையைப் பிள்ந்ததெறிந்து, கடல் முழுமையும் அலைவற்றி குழம்பு குழம்பாய்ப் போகும்படி கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திப் பலமாய் எதிர்த்து வந்த அசுர்ர்களின் முடிசாயும்படியாக, அடியுடன் அழியும்படியாக, வெட்டித் தலையற்ற உடல்களும் பெரிய கழுகுகளும் நடனமிடவும், ரத்தக்குளம் பெருக வைத்தும், (அவுனர் விேன்க் மணிகள் சித்றி விழ வைத்தும், (தேவர் முநிவர்களுக்கு) நல்ல காலம் வருவதற்கு வேண்டிய விதை யப் பலன் காட்டும்படி வைத்துத் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (உன் பதங்களுற உணர்வேனோ) 59 கற்கண்டு சொல், யானையின் தந்தம் கொங்கை, வஞ்சிக் கொடி இடை, அம்பும் நஞ்சும் கண்கள், கூந்தல் மேகம் என இவ்வாறு பலமுறையும்(உலவமை) கண்டு, உள்ளம் வருந்தி, நொந்து, மாதர்களின் வசப்பட்டு இரவும். பகலுமாக நின்று (அல்லது இரவும் பகல் எந்நாளும் நின்று) விதியின் பயனாய்; _