பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 151 61 மேகம் போன்ற கூந்தல் குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று, மகிழ்ச்சி மிக்கு - கைகளைக் கூப்பி, நெஞ்சத்தினுள்ளே இரக்கங் கொண்டு திரியும் பெண்களும் ஏற்ப்ட்டு, (பெண்கள் மயலும் உண்டாகி) விலைபேசி (அவர்களுடைய) பொற்குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க (அல்லது அஞ்சும் மெல்லிய) கொங்கைகளையும், தோள்களையும் சேர்ந்து அன்பும், நட்பும், குணமும் ஒன்றுகூட - கூடியும் உடனே ஊடியும், பின்பு கலந்து மனம் குழைந்து கேடு விளைவித்து எப்போதும் திரிந்து அழிவேனேர்! மன்மதன் நொந்து நைந்து, வெந்து, அழிந்து, சிதற அன்று ငြှုမ္ဘီ கண்ணை விழித்த கரிய க்ழுத்தை உடைய சிவபிரான் தந்த கூரிய வேலனே! கூட்டங் கூட்டமாய் நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சர்கள் (அசுரர்கள்) அஞ்சும்படி கொடிய போர் செய்த (திறலோனே!) அன்பர்களுக்கு இன்பந்தரும் நண்பனே - திறலோனே! கோபங்கொண்டு இலங்கை மன்னன் (ராவணனுடைய) தலைகள் சிதறக் கொடிய அம்பை ஏவினவனாம் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே! சிவந்த செவ்விய சதங்கையும், சிலம்பும், தண்டையும் அணிந்து திருச்செந்துாரில் எழுந்தருளியுள்ள கந்தனே! எங்கள் பெருமாளே! (அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ) 62 மான் கன்றை வென்ற கண்களாலும், தாமரைமொட்டுப் போன்ற கொங்கையாலும் - இருள் (கருநிறம்) அடர்ந்த கூந்தல் மேகம் (கருமேகம்) போன்ற கூந்தல் குலையாத (கலையாத) வண்ணம் மணமுள்ள மலர் குடும் அந்த வகையாலும்;