பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்| திருப்புகழ் உரை 1.65 69 மயிர்ச் சாந்தின் நறுமணங் கொண்ட அ ழகிய கூந்தலை உடையவர்களும், மெலிந்துள்ளதும், இன்பந்தருவதும், தளர்ந்துள்ளதுமான இடை தாங்குகின்ற பொன்னிறத்த கொங்கையை உடையவர்களுமான மாதர்களை - மனத்தில் காமஆசை மேலெழக் கலவி இன்பத்திற் கூடி, மந்திரம், மதம், ஜெபம் இவை தமைக் கைவிட்டு, இவ்வாறாக நாள்தோறும் சொல்லுதற்கு அரியதான முச்சங்கத்துத் தமிழ் நூல்களை ஆய்ந்தும், இனிய சொற்களைப் பேசியும், பூமியில் வாழ்வு செலுத்தும் நாள் (பலரை) வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும் - பரிசுத்த மில்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது ஆழதிய இன்பந்தரும் (திருவடி) மலர்களை (ம்னத்திலும் சிர்சிலும்) கொண்டு § மாட்டேனோ! தகுடதகு தாந்த தந்தத் * † or or ++ தகு கணக தாங்க ணந்தத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்கின்ற நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பிலாத மயிலை வாகனமாகக் கொண்ட்சந்தனம் அணிந்த - அழகிய மார்பனே! திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்க வெற்றிவேலைச் செலுத்தின செவ்விய திருக்கைக் குழந்தையே!) இமய மலை பெற்ற மகளாம் பார்வதியின் ஒப்பற்ற பால்னே (குழந்தையே!) விளங்குகின்ற வயிர மாலையை அணிந்த (அல்லது திண்மை வலிமை பூண்ட) கொங்க்ையை உடைய குறப்பெண் (வள்ளியின்) கணவனே! சந்திரன் (தவழும்) கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்கும் திருச்ச்ெந்துர்ப் பெருமாளே! (நின்பொற் புளக மலர் பூண்டு வந்தித் திடுவேனோ)