பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 173 (வயலின்) வரப்பின் மேல் எட்டிக் குதித்து மேலிடத்தில் உள்ள வட்டமான நிலப்பரப்பிலே செழிப்புடன் கிடக்கும் முத்துக்களைக் குவியக் கூட்டி நின்று சேல்மீன் கூட்டங்கள் வாழும்வயற்புறங்களைக் கொண்ட பூமியில் (புகழ்) ஓங்கிய திருத்தணிகையிற் சிறப்புடன் வாழ்கின்ற' வெற்றியா. ளனே! என்றும் உள்ளவனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குகனே! (பொதுமகளிர் தங்கள் சேர்வை தவிராய்.) 74 வயிறு சரியவும், மயிர் வெளுத்துப் போகவும், வரிசையாயிருந்த பற்கள் அசைவு பெறவும், முதுகு வளையவும், உதடு தொங்கிப் போகவும், ஒரு கை தடியின் மேல் வரவும், பெண்கள் பரிகாசச் சிரிப்புச் சிரித்து - பெருங்கிமவன் ன் ர் என் பேசவும், மல் §ಧ್ಧಿ ன்ை ఫిష్లో ஒ,ே |ိ குழறவும், கண் (ஒளி) சேர்ர்வுபட்டு குருட்டுத் தன்மை அடையவும், செவிட்டுத் தன்மையை செவிகள் அடையவும், வந்த பிணிகளும் அது சம்பந்தமாக அடிக்கடி வரும் வயித்தியனும் உடல்படுகின்ற வேதனையும் (ஒருபுறம் இருக்க மற்றொருபுறத்தே) சிறு பிள்ளைகள் (அப்பா) ஆஸ்தி எவ்வளவு) கடன் எது எது? என்று விடாது கேட்கத் துயரங் கொண்டு - மனைவி அழுது விழவும் யமதூதர்கள் வந்து நின்று போராடவும், மலம் ஒழுகவும், உயிர் மங்கும் பொ அது (ஒடுங்கிப் போம் பொழுது,) (முருகா! நீ) விரைவில் மியில்மேல் வரவேணும். * என் அப்பாவே வா! ரகுநாயகனே வா! குழந்தாய் வாமகனே! இதோ வா! என் கண்ணே வா! என் ஆருயிரே வா! அழகனே!