பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழ் உரை 3 2 வேதம் வேண்டியதில்லை, (அறுபத் து நான்கு) கலை ஞானங்கள் வேண்டியதில்லை, கீதமும் நாதமும் வேண்டியதில்லை, ஞான நூல் வேண்டியதில்லை; ஆதி குரு (ஆதியாம் சிவனுக்கும் குரு) என்னும் (பெரும்) புகழை அடைந்துள்ள வீரனாம் முருகவேளின் திருவடியைப் போற்றிப் புகழும் திருப்புகழைக் கேளுங்கள் தினந்தோறும். 6 3 ஞானம் பெறக் கூடும், நலம் பெறக் கூடும், எந்நாளும் வானத்தை அரசாளும் வரத்தைப் பெறக் கூடும்- மோன வீட்டில் ("சும்மா இருத்தல் என்னும் பெருநிலையில்) ஏறக் கூடும்; யானைக்கு இளையவனாம் முருகவேளின் திருப்புகழை ஒதுவார்க்கே ஆகும் இந்த உபதேசச் சொல். 7 ஆறுமுகம் தோன்றும், அழகிய வேல் தோன்றும், அவன் (முருகவேள்) ஏறி (யுலவும்) மயில் தோன்றும், அழகு தோன்றும், கோபித்து வந்த சூரனுடைய முடியைத் துணித்தெறிந்தவனாம் முருகவேளின் திருப்புகழை இப் பூமியில் (நியமமாக) ஒதினவரிடத்தே, ஒதினவரிடத்தே ஆறுமுகம் முதலியன தோன்றும்) 8 4 வினா (கிரெளஞ்சி) மலை பொடிபடும்படி ஏவின திருக்கை வேலனே! இருப்பிடம் உனக்கு எது? எனக்குத் தயை செய்து சொல்லியருளுக! விடை உருக்கம், நல்ல சிறந்த உயர்ந்த குலம், ஒழுக்கம் (இவை) இல்லாதவர்களாயிருந்தாலும் திருப்புகழ் படிப்பவர்களா யிருந்தால் (அவர்கள்) மனத்தினிலே நாம் வீற்றிருப் பேம் |