பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 177 பால் நிறமுள்ள அன்னத்தின் மீது (வீற்றிருக்கும்) நான்கு முகங்களையும் செம்பொன் நிறத்தையும் கொண்ட் (படைத்தல் தொழில் பாலகனாம் பாதுகாப்பவனாம்) பிரமனை மோதித் தண்டனை விதித்தவனே! ன்பு அந்தப் பெரிய அநுமாரின் தோள்மேலே தேதி போர்செய்து - பாவியாம் ராவணனுடைய தலைகள் சிதறவும், உத்தமராம் விபீஷணர் வாழ்வுறவும் (வைத்து), மணந்த பாவையாம் சீதா பிராட்டியாரின் தோளைச் சேர்ந்த மாமனாம் திருமாலின் சிந்தைக்கு இனியவனே! நல்லுணர்வுள்ள நாரதர் (உன்னிடம்) வந்து இது அவள் (வள்ளி) வாழ்கின்ற (தினைப் புனமாம் என்று குறிப்பிட்டுச் சொல்ல, உடனே (நீ) முடுகிச் சென்று தேன்போலு மொழியை உடைய (வள்ளியின்) பச்சைக் கற்பூரக் கலவை அணிந்து, அழகு பொருந்திய, இன்பும் தருவதான [ Ꮭ☾Y❍U போன்ற கொங்கைகளில் தோய்ந்தவனே! சேல்மீன், வாளைமீன், வரால்மீன் இவை கிளம்பித் துள்ளிப் பாய்ந்து, குலை விட்டுள்ள் கமுக மரத்தில் (பாக்கு) மரத்தில்) கலக்கும் ன்பகரமான (திருச்)செந்துார் நகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (உன் திருவருள் - மெய்ஞ்ஞான தவஞ்சற் றருளாதோ!) 76 நாலும் ஐந்தும் (ஆக ஒன்பது) வாயில்கள் வகுக்கப்பட்ட, பழிச் சொல்லுக்கு இடமாகிய உடம்பு காலும் கையும் கொண்டு (ஒரு பெண்ணினுடைய உடலில் இடம் பெற்று வந்த உடம்பு இத்தகைய உடம்பின் உள்ளே (அல்லது நரம்பு, எலும்பு இவையோடு கூடிய உடம்பின் உள்ளே) - இந்திரியம் பொருந்த முதலிருந்தே (ஐம்பொறிகளின் வழியே) (பலவித) கூத்துக்கள்ை ஆடி, ஊராரும் அறிந்திடாதபடி போவதற்கென்றே (மாய்வதற்கென்றே) வளர்வதற்கு முன்னே;