பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 முருகவேள் திருமுறை 12 திருமுறை நூல. நந்த கோடி தேடி மால்மி குந்து பாருளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி விளை தீமை. நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு தருவாயே; காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல மெனுமாதி. காம னைந்து பாண மோடு வேமி னென்று கானு மோனர் காள கண்ட ரோடு வேத மொழிவோனே: ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீருமூல ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே. ஆரணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான பெருமாளே (6.1) 77. திருவடி பெற நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் றினைவோரை. 1. வாரணம் - கோழிக் கொடி ஆரணங்கை - வள்ளியை மேவும். விரும்பும் எனலுமாம். 2. பிங்கலன் - குபேரன்.