பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 191 புதிய வகையில் நுனி நகத்தால் விகாரப்படும்படி உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்ய(நகக் குறியிட), மதிக்கத்தக்கஅழகிய,பிறை போன்ற புருவவெயர்வு (வேர்வை) மேலெழும்படியாகக் கங்கையைச் சடையில் தரித்த பெருமான் (சிவன்) - பொடியாக்கிய காமனுடைய படையாகிய மகளிர் கூட்டத்துக்கு (அல்லது)காம சாத்திரநூல் தொகுதிக்கு (எனது) அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும் துன்பந்தரும் பொருட் பெண்டிர் (வேசியர்) மேல் அன்புகொள்ளும் மனப்பான்மையையும் விடமாட்(βι (βουτιτ? திதிதி தத ததந் திந்தித் தந்தட்.தந்தத் தெனனானாதிகுர்தி திகிர்ததிந்...திரிரி தார என்று பலமுறை ஒப்பிலா வகையில் திமிலை யென்னும் பறையை ஒலித்து எட்டுத். திக்குகளும், அண்டத்தின் சுவர்களும் சோர்ந்து போகும்படிவஞ்சனை எண்ணத்துடன் வந்த பெருங் கூட்டமான, மாலையணிந்து புயங்கள் உன்டய அசுரர்கள் முதலில்) கோபித்தும்(பின்பு) பயந்தும். (அதன்பின்) மயிர்த் தலையுடன் (உனது) திருவடியிற் பணிந்து எங்களுக்கு உனது கிருபையைத் தந்தருள் என்று கேட்கும் படிக்கும். போர் செய்தவனே குமரனே! தாமரைத் தடாகங்கள் சுற்றி யுள்ள வயலூர் முருகனே! எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் (கரையில்) தாக்குகின்ற திருச்செந்துார்க் கந்தப் பெருமாளே! (பொருளின் மகளிர் தம் அன்புப் பண்பைத் தவிரேனோ) 82 o மணமுள்ள கலவைகளினின்றும் நறுமணம் வீசுகின்ற அழகிய கொங்கைகளை உடைய மாதர்களின் படைகளுள் யமபடை என்று சொல்லும்படியாகச் சந்திக்கும் கட்கடையா லும்(கடைக்கண்ணாலும்);