பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழ் உரை 5 5 திருப்புகழ் படிப்பவர்கள் அவர்களுக்கு உண்டாகும் சிந்தைத் திடத்தாலே ஒருவரையும் மதிப்பது இல்லை, திருவருள் துணை அவர்களுக்கு இருப்பதால், (கிரெளஞ்ச) மலை சிதறும்படி மிகப் போர் செய்து வெற்றி கொண்டுள்ள மயில்மீது வீற்றிருந்து ஒப்பற்ற திருத்தணிகையில் நிற்கும் பெருமாளே! 10 6 ஒப்பற்ற சிறந்த அறுமுகனும் மேன்மை பொருந்திய மெய்ஞ் ஞான குகனுமான (பெருமாள்) பேரால் அருணகிரி (இந்தப்) பெரிய உலகில், சீர் நிறைந்த துதிகளாகத் துதித்துள்ள திருப்புகழைப் போற்றுபவர்கள் ஈடேறுவார்கள். 11 வள்ளி மணாளனும் மயிலேறும் வள்ளலுமாகிய (முருக வேளைத்) தெளிவுள்ள தமிழாற் பூசித்துச் சீர்பெற, உண் மையாகவே (எய்ப்பினில்) வைப்பாகி விளங்கும் (இடுக் கண் பட்ட காலையில் உதவும் பொருளாகி இலகும்) அருணகிரி (முருகவேளை) வாழ்த்தி உரைத்த திருப்பு கழைக் கற்பவர்கள் கரையேறுவார்கள். 12 7 அருணகிரிநாதர் (உரைத்த) பதினாறாயிரம் என்று சொல்லப் படுகின்ற திருப்புகழை ஒதுங்கள்; திருப்புகழ் பரகதியை (அடைவதற்கு) ஏணியாகும்; அருட்கடலில் திளைப்ப தற்கு ஏற்ற மரம் ஆகும் ; மனத்தளர்ச்சி யில்லா வகை அழுத்தம் தருதற்கு ஆணியாகும்; பிறவி (வேரை) அறுப்பதற்கு அரம் ஆகும். 13