பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்' திருப்புகழ் உரை 197 84 நிறைந்து கச்சொடு (ரவிக்கையோடு) கூடிய, கும்பம் போன்ற, குளிர்ந்த, சந்தனக் கலவை அணிந்த கொங்கைகளை உடைய (பொது) மகளிருடைய அவலகூடிணமான வஞ்சகம் உள்ள ஆடல்களிலே அலைப்புண்டு, பொழுதை வீணாக இழந்து, போய்விட்டது மானம் என்பதை அறியாத - கீழ்மகனாகி, மனது கட்டுக்கு அடங்காத ஐம்(பெரும்) பாதகங்களைச் செய்தவனாய், தருமமே செய்யாமல், அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைக் கண்டு(ம்) ஆசையில் அழுந்துகின்ற (எனது) மயக்கம் திரும்படி: காரணம், காரியம் என (நிகழ்கின்ற) நிகழ்ச்சிகளில் (உள்ள ஆராய்ச்சிகள்) எல்லாம் ஒழிந்து, நான் (நான்) என வரும் (ஆணவக்) கொழுப்பு நீங்கித் தியானத்துடன் இருந்து, (பிராண) வாயு உடலூடே இயங்கி (ஒடி), மூக்கின் மீது இரண்டு விழி (முனைகளும்) பாய - காயம், வாக்கு, மனம் (மனம், வாக்குக், காயம்) என்னும் மூன்றும் ஒரு. வழிப்பட அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருத்தாள்களை நினைந்து (அத்திருவடிகளின்) காட்சியைப் பெறுவதற்கு மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகள் என்ன (நான்) விளங்கும்படி அருள்புரிவாயே!