பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 201 மனைவி, மக்கள், தம் உறவினர் வந்து கதறி (அழ), உடலானது நெருப்பிற் - சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்க (அந்த உறவினர் சுடு காட்டை விட்டு) நீங்கி, நீரில் (பந்தம் என்கின்ற) மாயம் ஒழியப் படிந்து குளிக்க, உயிர் கொடிய கண்களை உடைய யமனது கையிற்சிக்கிக்கொள்ள மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பாசமாகிய (பற்று எனப்படும்) மாயக் (கூத்து) நிகழ்கின்ற அந்த நாளில் உனது அடிமையாகிய நான் வெற்றி பொருந்தும் (உன்) திருவடிகளைத் தொழ வந்தருளுவாயாக. சிங்கம், புலி தங்குகின்ற காட்டுக்குச் சென்று வேடப் பெண் (வள்ளியுடன்) வாழ்ந்தவனே! சிந்தை மகிழ அன்பர்கள். புகழுகின்ற திருச்செந்துாரில் உறைகின்ற முருகனே! எவ்விடத்திலும் விளங்குகின்ற நிலவு (போன்றிருக்கின்றது), தாமரை (போன்றிருக்கின்றது) என்று (உவமை) சொல்லப் படும் முகத்தையுடைய மாதர்கள் (வள்ளியும் தேவசேனையும்) இன்பம் பெருக அன்போடு அணைகின்ற (பெருமாளே)! என்றும் இளமை விளங்க இருக்கும் பெருமாளே! (வென்றி அடிகள் தொழ வாராய்) 86 மேகம் என்னும்படியான கூந்தல், பிறைபோன்ற அழகிய புருவங்கள் எனப்படும் வில், அம்பு, அழகிய கயல் மீன், வண்டு, தாமரை இவைகளைப் பழித்துத் தமது சிறப்பை வெளிக்காட்ட வல்ல கண்கள் - 1. நீரிற் படிந்துவிடு பாசம் - திருப்புகழ் 162 பிணத்தை எரியவிட்டுச்சுடுகாட்டை விட்டகன்று நீரிற் குளித்தவுடன் பந்த பாசம் விலகுகின்றது . "நல்ல கிளை குளத்து நீரளவே" - ஷேத்திரத் திருவந்தாதி.