பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 முருகவேள் திருமுறை 12 திருமுறை 88. பொது மகளிர் உறவு அற மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள்பழையோர்மேல். வால நேசநி னைந்தழு வம்பிகள் ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள் 'வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிகளெவரேனும், நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள் காசி லாதவர் தங்களை யன்பற நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ளவர்தாய்மார். நீேலி நாடக மும்பயில் மண்டைகள் பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள் நீச ரோடுமி ணங்குக டம்பிக, ளுறவாமோ, பாயு மாமத தந்திமு கம்பெறு மாதி பாரத மென்ற பெருங்கதை பார மேருவி லன்று வரைந்தவ னிளையோனே, 'பாவை யாள்குற மங்கை செழுந்தன பார மீதில ணைந்து முயங்கிய பாக மாகிய சந்தன குங்கும மணிமார்பா, சீய மாயுரு வங்கொடு வந் தசு ரேசன் மார்பையி டந்து பசுங்குடர் சேர வாரிய ணிந்த நெடும்புயன் மருகோனே. 1. வருகிற' என்பது வாற' என மருவிற்று, 2. நீலி நாடகம் - பாடல் 27 ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க * பாலை நேர்மொ ழி வஞ்சி யிளம்பிடி தேவயானை செழுந்தன குங்கும பார மார்பி லணைந்து முயங்கிய எழில்மார்பா (பா - வே.) பார மான்மத சந்தன முங்கிய மணிமார்பா (பா - வே.) t அசுரேசன் - இரணியன்.