பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 214 முருகவேள் திருமுறை 12 - திருமுறை வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை மணிவ டம்பு தைந்த புயவேளே: அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க மலறி வந்து கஞ்ச மலர்மீதே. அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே. (76) 92. காலன் வரா வகை கழல் பெற மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் தடுமாறி. மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி 1 யிளையோடும்; கரையில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது அங்கிருந்த அரசமரத்தின் இலை ஒன்று பொய்கை நீரில் விழ, அந்த இலை உருமாறி ஒரு பாதி மீனாகவும் ஒரு பாதி பறவையாகவும் மாறி ஒன்றை ஒன்று இழுத்துப் பூசலிட, அதைக் கண்ட நக்கீரர் தமது ஜெபத்தைவிட்டு மீன்-பறவை இவைகளின் பூசலை விலக்கவேண்டி அவைகளை இணைத்திருந்த மெல்லிய சதையைக் கிள்ள, மீனும் பறவையும் உடனே துடிதுடித்து இறந்தன. இந்தப் பாதகத்தை ஏன் செய்தனை என்று முருகவேளின் பூதகனத் தலைவர் நக்கீரரைக் கொண்டு போய் ஒரு மலைக்குகையில் அடைத்தனர். அந்தக் குகையில் கற்கிமுகி என்னும் குதிரைமுகப் பெண் பூதம், ஆயிரம்பேர் நிறைந்தவுடன் உண்ண வைத்திருந்த 999 பேர்களோடு நக்கீரரும் அடைபட்டனர். இந்த இடர்ப்பாட்டை அறிந்த நக்கீரர் தாம் முருகவேளைப் பாடாதிருந்தது பிழையென்றுணர்ந்து அவரைப் பாடி உய்யலாம் எனத் தேர்ந்து பாட முயன்றபோது முருகவேளே "உலகம் உவப்ப" என்று அடி எடுத்துக் கொடுக.க நக்கீரரும் திருமுருகாற்றுப்படை" என்னும் அருமைப் பாடலைப் பாடினர். தமிழ் முருகள் அப்பாடலைக் கேட்டு மிக உவந்து தமது திருக்கை வேலால் குகையைப் பிளந்து அந்தப் பெண் பூதத்தைக் கொல்வித்துப் புலவரைக் குகையினின்றும் மீட்டனர். இவ்வரலாற்றின் விரிவைத் திருப்பரங்குன்றத்துப் புராணத்திற் காண்க