பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முருகவேள் திருமுறை lவிநாயகர் o_ கணபதி துணை திருத்தணிகேசண் துணை சிவமயம் விநாயகர் துதி 1. மலர்கொடு பணிய கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்; மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயாணை. மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே, முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே. முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா, அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி. அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மனமருள் பெருமாளே ! (1) (பாட வேறுபாடு) "ಸ್ಖನ್ತ முப்பழ மொடுபொரி'