பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 முருகவேள் திருமுறை (2 - திருமுறை 99. திருவடியைப் பெற வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு வகிரோமுன்வெந்து போன புராதன சம்ப ராரி புராரியை வென்ற சாயக மோ? கரு விளையோகனன்; தஞ்ச மோயம துாதுவர் நெஞ்ச மோவெனு மாமத சங்க மாதர் பயோதர மதில்மூழ்குசங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு தண்டை சேர்கழ லீவது மொருநாளே, பஞ்ச பாதக தாருக தனன்ட னிறெழ வானவர் பண்டு போலம ராவதி குடியேறப்பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை பங்க நீறெழ வேல்விடு மிளையோனே: செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே.செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சூழ்தரு * செந்தில் - மவி பெருமாளே. சந்தில் மாநகர் மேவிய பருமா (84) 1. சம்பரன் - மன்மதனாற் கொல்லப்பட்ட அசுரன். சம்பரனுக்கு அரி (பகைவன்) சம்பராளி (காமன்), புராளி-திரிபுரங்களுக்குப் பகைவன் (சிவன்). 2. "கண்ணெனக் கருவிளை மலர்". ஐங்குறுநூறு: 464. 3. ஒவிரு . ஒவ இரு : ஒவ நீங்க.

  • சிங்கை மாநகர் (பா - வே). சிங்கை என்பது காங்கேயம் 941-942 பாடல்களைப் பார்க்க