பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 233 99 விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய நஞ்சழோ, கயல்மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவ்டுவின் பிளவோ, முன்னே - வெந்து போன பழைய மன்மதன் சிவபிரான்மீது விட்டு வ்ென்ற அம்போ, காக்கணம் (காக்கட்டான்) மலரோ - (அக்) கண்கள் (யாரும்) அடைக்கலம் புகும் இடமோ! யமதூதுவர்களுடைய நெஞ்சமோ; என்னும்படியான அழகிய, பெருமை தரக் கூடிய, சேர்க்கையையே (நாடும் பொது) மகளிருடைய கொங்கைகளில் மூழ்குகின்ற எண்ணங்கள் அழிய, (உனது) இரண்டு கூதள மலர்களின் நறுமண மாலை தோய்ந்துள்ள தண்டைகள் விளங்கும் ருக்கழலை (நீ) அளிப்பதாகிய ஒரு நாளும் (அடியேனுக்குக்) கிடைக்குமா? (கொலை, பொய், களவு, கள்ளுண், குரு நிந்தை எனப்படும்) ஐந்து பெரும் பாதிகங்கள்ையும் செய்தவனாகிய தாரகாசுரன் என்னும் யமன் பொடியாம் படியும், தேவர்கள் தாம் முன்பு இருந்த படியே அமராவதி என்னும் தங்கள் ஊரில் குடியேறவும் - தாமரை ஆசனத்துப் பிரமனும், திருமாலும் (முருகவேள் நமக்குத் துணை செய்வார்) அஞ்சாதிர்கள் என்று (தேவர்களுக்குத் துணிவு)கூற, மாயையில் வல்ல மலையாம் கிரெளஞ்சம் பங்கப்பட்டு (கேடு அடைந்து) பொடியாகும் படி வேலைச் செலுத்திய இளையோனே!செவ்விய சடைக் காட்டின் மேலே கங்கை, குருக்கத்தி, ஆத்தி, நிலா, இவைகளைச் சூடிய தலைவர் (சிவபிரான்) அருளிய பெருமை வாய்ந்த குழந்தையே! செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்த சிறந்த மதில்கள் சூழ்ந்துள்ளதுமான (திருச்) செந்துார் மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (தண்டை சேர் கழலிவதும் ஒரு நாளே!)