உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முருகவேள் திருமுறை 13- திருமுறை ஆதி சங்கர ணார்பாக மாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி. ஆவல் கொண்டு விறாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. (2) 102. பெண் மாயை விலக வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக மெழில்கூர. வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மேலான வாயித ழமுதுாறத்; தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகையென்றிட வாகாக ஆரன நடைமானார் . தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் தருவாயே; கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் விடும்வீரா.

  • விறாலே - வீறாலே.