பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 243 கரிய நஞ்சை உணவாகத்தேவர்கள் வாழும்படி முன்னாளில் உண்ட கரிய கழுத்தை உடைய மகா தேவனார் தந்தருளிய முருகனே! (வேதம் படித்த) பிரமனொடு வாதாடி, ஒரு சொல்லுக்குப் (பிர ணவத்துக்கு) உரை ஒதுக என்று (அவனைக்) கேட்க, அவன் பொருள் வாராது என்று கூறி (விழித்து நிற்க), அவனது ஆணவம் (நான் என்னும் செருக்கு) அழிய அவன்ைச் சிறையிலிட்ட வேலன்ே! சூரியனின் கிரணங்கள் நீங்காது (எப்போதும்) வீசுகின்ற கோபுரம் விளங்குவதும் , லட்சுமி தேவி விரும்பி வாசம் செய்வதுமான (திரு) ஆவினன்குடியில் வீற்றிருப்பவனே! தேவர் தலைவர்களின் பெருமாளே! (மானார் மாயைவடிவெனத் தோணிடும்படி நீ அருள் தருவாயே!); 103 மூல மந்திரமாகிய (ஆறெழுத்தை) ஒதுவது என்பது இங்கே 醬蠶 து) , ஈதல் (கொடுத்தல்) என்பது இங்கே (என்னிடத்தில்)கிடையாது; அன்பு என்பது இங்கே (என்னிடத்தில்) கிடையாது; (மனத்தை அடக்கும்) மெளன நிலை என்பது இங்கே (என்னிடத்தில்) கிடையாது; ஞானம் என்பது இங்கே (என்னிடத்தில்) கிடையாது; மர்தர்கள் மீது. மோகம் என்பது உண்டு; அதில் மிக்க தாகம் (வேட்கை) உண்டு; அதனால் செய்த அபசாரம் உண்டு; அதனால் வந்த அபராதம் உண்டு; (எல்லாரும்) இட்ட பேர் மூகன்' (கீழ்மகன்) என்று ஒரு பேரும் உண்டு (அல்லது பன்றி உருக்கொண்டு வந்த மூகன் என்னும் அசுரன் இவன் என்கின்ற பேரும் உண்டு); (உனது) திருவருளிற் பயிலாத -

  • அருச்சுனனது தவத்தைச் சோதிக்க வந்த வேட உருக்கொண்ட சிவபிரானாலும் அருச்சுனனாலும் கொல்லப்பட்ட (பன்றி உருவங். கொண்ட) அசுரன் மூகன் (மூகாசுரன்.)