பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 251 நஞ்சை உண்ட சுந்தரி, காளி,யோகினி (எனப்படும் துர்ககை) 醬 கூட்டங்களொடு_ஆட, பெரிய அலை வீசும் கடல் வந்து போம்படி நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே! சை கொண்டு ஒப்புற்ற வேடர் குலத்து (மயக்கவல்ல = அழகியாம்) సీ:: பாத தி.ஃ. மீது வீழ்盪 வண்ங்கிய (பெருமாளே) திரு ஆவினன்குடியில் வீற்றிருக்கும் (திரு ஆவினன்குடியை விரும்பும்) தேவர்கள் பெருமாளே! (எனை ஆள்வாய்). 105 அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், நவமணிகள், தக்க சந்தனம், பவள வடங்கள், செண்பகப் பூ, குளிர்ந்த மகிழம் பூ, செங்கழுநீர்ப் பூ (இவைகளால் ஆய). மாலை, சங்கிலி, இவைகள் விளங்கும் கழுத்தொடு கூடிய வராய், அணிகல்ன்களையும், பல்வித அலங்காரங்களை யும் மெச்சும் படியான தன்மையிற் கொண்ட (தமது) பருத்த கொங்கைகளை விற்கின்ற பொதுமகளிருடைய. பால், பழம், சர்க்கரை, பரிசுத்தமான தேன் என்று சொல்லும் படியாக அதிகமாக ருசிக்கின்றவையும், பெரும் பாவமே தருகின்றவையுமான சொற்களில் (நான்) விருப்பங். கொள்ளாமல் - "(உனது) பாத தாமரைகளை (என் நெஞ்சிற்) பொருந்த உட்கொண்டு, (நான்) கூறிவரும் திருப்புகழ்ப் பாடல்களைத் தினந்தோறும் (தவறாமல்) பாடவேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீயே! உலகத்தை முன்பு படைத்த பிரபுவாகிய பிரமன் (தனது ஐயம் தீர்ந்து உண்மைப் பொருளை இவரால் அறிந்தேன் என் உன்னை) மதிக்கவும், முழங்குகின்ற கடல் வற்றிப்போகவும் மலைகள் எட்டும் (எட்டுத் திசைகளில் உள்ள மலைகள் நிலைகுலையவும் "இ து அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும்.