பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 257 108 மேகங்களை அணிந்த மலைகள் உள்ள (இப்) பூமியில் மேல் மேலும் செறிவுற்றுப் பொருந்தி (அடிக்கடி பிறந்து) வினையைப் பெருக்கும் காதல் கொண்ட நெஞ்சம் சோர்ந்து தடுமாறி - வாயு, நரம்பு, ரத்தம், தோல், கொழுப்பு (இவைகளொடு கூடிய) பொய்யான (இந்த) உடல் ஒன்றைச் சுமந்து, அடியேனாகிய நான், மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மைகொண்ட கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடையகொடி போன்ற மகளிருடைய (அல்லது பொல்லாராம் மகளிருடைய) - தாள்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களை விரும்பி, மிகவும் கீழான நிலையை அடைந்து அழிந்து போவது தக்கதாமோ! சூரனுடைய உடல் அழிந்து போகவும், தேவர்கள் நின்று தொழவும், (கடல்) நீர் வற்றவும் போர் செய்த வேலனே! பரிசுத்தம் கொண்ட குற மயிலாம் வள்ளி நின்ற (தினைப்) புனங்கள் சூழ்ந்த பெரிய மலையாம் (வள்ளி மலையில்) திரிந்தவனே! (வேதப்) பிரமனும், கருடக் கொடியோனாம் (திருமா லும்) தொழ, முழு நஞ்சை உண்ட சிவபிரானுக்கு உரியவனே ! வேள்விச் சாலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களிற் சூழ்ந்துள்ள திரு ஆவினன்குடியிற் பெருமாளே ! (நான் தாழ்வடைந்து உலையத் தகுமோ!)