பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/280

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 முருகவேள் திருமுறை 13. திருமுறை "கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட வென்றுகு ருந்தினி லேறி மங்கையர் கண்கள்சி வந்திட வேகலந்தரு முறையாலே. கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் மருகோனே, குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு மின்பமி குந்திட வேய ணைந்தருள் குன்றென வந்தருள் நீப முந்திய மணிமார்பா. கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய பண்பு தருந்திருவாவினன்குடி குன்றுக ளெங்கினு மேவளர்ந்தருள் பெருமாளே. (12) 2. சிவகிரி 112. பொதுமகளிர் உறவு அற கறுத்த குழலணி மலரணி பொங்கப் பதித்த சிலைநுத லணி தில தம்பொற் கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் சிரமான 1. நந்தகோபாலரது வீட்டில் ஒரு சகடத்தின் (வண்டியின்) கீழ்க் கோடியிற் கிருஷ்ண பகவான் பள்ளிகொண்டிருந்தபோது கம்சனால் ஏவப்பட்ட அசுரன் ஒருவன் அந்த வண்டியிற் புகுந்து அவரைக் கொல்ல வர அவர் பாலுக்கு அழுகிற பாவனையில் அவ் வண்டியை உதைத்த மாத்திரத்தில் அது கவிழ அசுரன் மாண்டான் என்பது வரலாறு 2. நீராடியிருந்த கோபிகாஸ்திரிகளின் ஆடையுடன் கண்ணபிரான் குருந்த மரத்தில் ஏறிய திருவிளையாடல். 3. திலகம் - சுட்டி, பொட்டு. 4. சிரம் - கமுகு