பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/285

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 269 113 கூடாகிய உடல் (அதில்) மலம், சலம், கெட்ட வழுக்குந் தன்மை உடைய கொழுப்புடன் எலும்பு, பொருந்திய சரிகின்ற சதை, ஈரல், குடல், முறை குலைந்த நோய்வாய்ப்பட்ட மயிர், ரத்தம் இவையொடு பல் ஆபாசங்களிலும் - குடி புகுந்துள்ள அவரவர் (ஐவர்) பொல்லாத கொடுமை யாளர்கள், அகந்தை கொண்டவர்கள், ஒரு வழியிற் பொருந்திப் போகாதவர்கள், குற்றமுள்ளவர்கள், குரங்குபோலச் சேட்டை செய்பவர்கள், அறிவில்லாத வர்கள், ஒழுக்கம் இல்லாதவர்கள், மிருகத்துக்கு ஒத்த வலிமை வாய்ந்த விட குணங் கொண்டவர்களோடு உறவு கொண்டவனும், நரகத்துக்கு வாய்த்தவனும், மனம் போனவழி குதிர்ைபோல ஒடுபவனும், அழுது ஏங்கும் வறியவனும், உடலின்மேல் மிக்க அன்பு கொண்டவனும் (ஆகிய என்பொருட்டு) அழகிய முகத்தவனே! சரவணனே! (நீ) அழகொடு மயிலில் ஏறி - -- செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை எனது மனத்தினில் அழுந்தும்படியாக உபதேசிக்க வந்த (திரு) முக நகைபூத்த ஒளியையும், குளிர்ந்த திருக் கண்களையும், இணைமல்ர்த் திருவடிகளையும் (நான்) மறவேன். இலுப்பை மரம், மகிழமரம் இவையொடு கூடிய மேகம் தங்கும்பல சோலைகளிலும் உறைகின்ற குயிலும் வண்டும் (பாட்டு) யைப் பரப்ப அதற்குத்தக மயில்கள் ஒத்து நடமிடுகின்ற இணையில்லாத புலி நகர் (சிதம்பரம்) உள்ள வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே! இருள் சூழ்ந்த மலையாம் கிரெளஞ்சம் இடிந்து பல கரங்களும் பொடியாக, மகர மீன் நிறைந்த கடல் தீக்கொள்ள, ஒள்ளிய திசைகளில் உள்ள (அஷ்ட) கஜங்களும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வ்ந்த அசுரர்களோடு அவர்கள் தம் யானைப் படைகளையும், ரைப்படைகளையும் யமலோகத்துக்கு அனுப்பின வேளே!