பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 271 உயர்ந்த பொன் நிறங்கொண்ட பிரமனும், முநிவர்களும், தேவர் களும், அரம்பை மகளிரும் ஹரஹர சிவசிவ்! சுயம்பு ர்த்தியே! எனப் (திரு நடனம் செய்கின்ற் ருவடி அழகராம் சிவனுக்குக் குருநாதனே! செழித்த பவள ஒளியும், நிலவைப் (பழித்துச்) சிரிக்கும் சிரித்த முகழும் சிறப்புடன் அம்ைந்த் குறமகளாம் வள்ளியின் இணை முலைகள் (மார்பில்) அழுந்தும் வண்ணம் வெற்றிகொண்டு அவளை அணைந்த குக்னே! சிவமலை மருவிய பெரும்ாள்ே! (தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே) 114 கலவைச் சாந்து அணிந்த கொங்கையைத் திறந் து, முல்லை மலர்ஒத்த பற்களைக் காட்டி, கயல்மீனோடு மாறுபட்டு (விளங்கும்) கண்கள் (காதுகளில் உள்ள) குழைகளைத் தாவி எட்ட கறுத்த கூந்தலை வாரி ஒழுங்குபடுத்தி, மலர்கள் சொருகப்பட்ட கட்டு கலைவதால் - இருளை நீக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப்போல்ச் சிந்த பூரண சந்திரன்போலச் சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி இன்பம் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவ்க்கும்படி நின்று விலை பேசி (வந்தவனது) மூல மல்லாம் தனது கையிற் புக வைத்த பின்னர் அழகிய புடைவைன்யத் திறந் து நெருங்கும் அவ்வேசையருக்கு ஈடுபட்டிரங்கி மெலிந்து நிற்பேனோ! இளம்பிறை, கொன்றை, தும்பை, பாம்பு அணியும் சிவபிரானுக்கு இணங்கி (அவருக்கு) இனிமை வாய்ந்த (மூலப்) பொருளை உபதேசித்த குருநாதனே! யானைமுகக் கணபதிக்குப் பிரியமான தம்பியே! வாசனையுள்ள கடப்ப மாலை அணிபவனே! எனஆl தலையில் திருவடியைச் சூட்டியவனே!