பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி திருப்புகழ் உரை 13 கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, அதனுடன் நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், (வண்டின் எச்சில் எனப்படும்) தேன், பயறு, அப்ப வகைகள் பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப் பழம், (இ.டி) மாவு - பல வகையன, ஒப்பற்ற (மூலம்) கிழங்குகள்; சிறந்த உணவு (வகைகள்), ᏭᏖL_©Ꮱ© (இவைகளைப்) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற விக்கின சமர்த்தர்' என்னும் அருட் கடலே! (அருள்) மலையே! வளைந்த சடையையும் (பினாகம் என்னும்)வில்லையும் (கொண்ட) பரமராம் அப்பர் பெற்ற திறலோனே! (யானைக்) கொம்பு உடைய பெருமாளே! (திருப்புகழ்.செப்பென எனக்கு அருளியதை மறவேன்.) 4 நஞ்சு பொ ருந்திய கடல், அமரர் படை, சூலம், அருச்சுனன் விடும் பாணம் எனக் கூறும்படியான கண்களையும் மிக்க பாரவிதமான (கொங்கைகளையும்) உடைய மாதர்களின் செயல்களால் வரும் விளைவுகள் ஒன்றையும் (ஆய்ந்து) அறியாமல்; மணம் வீசும் பாயலில் பகல் இரவு எனப் பாராமல் கலவி (யின் பத்தில்) மூழ்கிப் பயனற்றகீழ்மகனும் அறிவினனுமாகிய இவனும் (உனது) உயர்ச்சி மிக்க திருவடி யினைகளைச் சேர அருள் புரிவாயாக,