பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/293

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 277. அண்டங்களை(ப் புரத்தல்) கண்டும் ன்பு ஒருகால் அவைகளை உண்டும், முடுகிவந்த போரில் அருச்சுன்ன தேரைப் (பாகனாக இருந்து) நடத்திய பரிசுத்த மூர்த்தி, (வஞ்சர்க்கு வஞ்சன், சங்க் பாணி (ஆகிய) திரும்ாலின் மைந்தனாகிய பிரமன் ஈன்ற மைந்தனர்.கிய நாரதமுநிவர் (செய்த) (வேள்வித்) தீயில் எழுந்த ஆட்டுக்கடாவை ஏறி நடத்த வல்ல (பெருமாளே)! 鯊下鯊*鯊勒 (அல்லது அடையாள உறுப்பாக) தாமரையும் சங்கும் பொலிந்து விளங்கும் தடாகங்கள் நிறைந்த வளப்ப்தைப் பெற்ற சிவகிரியில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள்பெற ....... அருள்வாயே!” 116 கலகத்தைத் தரும் கயல்மீன் போன்ற விழி போர் செய்ய மகளிர் கூட்டத்தின் மத்தியிலும் பக்கத்திலும் வருகின்ற பாவிகள், கோபக்காரிகள், இனிக்கப் பேச்சுக்களைப் பேசும் விலை மாதர்களுடைய (பொது மகளிருடைய) கலவிச் செயல்களின் இன்பமே இனிமையானதென்று மனம் இப்படி நாள்தோறும் அலையாதபடி, (உனது) கருணை வழியே என்னை ஆண்டருள அருள்புரிவாயாக, இலவ மலருக்கு ஒப்பு ஆகிய வாயிதழை உடைய வள்ளி நாயகி மனம் உருகத் தழுவிய சிறப்பின்ால் உயர்ந்த புகழைப் பெற்ற காமுகன் என வேடங்கொண்ட அழகனே! இன்ப மிகுந்த அரிய வேதங்களைக் கற்ற மறையோர்கள் (வேதங்களைச்) சொல்ல அன்புடனே (அவர்களுக்கு) அருட் செல்வங்களை இசைந்து தருகின்ற அநுகூல்ன்ே! மனதைக் கவர்பவனே! முதல்வோனே! நிலவைச் சடையின்மேல் அணிந்துள்ள மூலப்பொருளாம் (சிவனது). செவியிற் பிரண்வப் பொருளை ஒதிய குருமூர்த்தியே! அசுரர்களுக்கு ஒரு பகையாளியாய் வந்த ஒளிவேலனே!