பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 13. திருமுறை வாருமென வேயொருவர் நோகாம லாலவிட மீசர்பெறுமாறுதவியேதேவர் யாவர்களும் வாழஅமு தேயகிரு மாமாய னாரினிய மருகோனே, மேகநிக ராணகொடை மாணாய காதிபதி 'வாரி கேலி மாருதக ரோ போரி மாமதன வேள் கலிசை வாழவரு காவேரிசேவகன துளமேவும். வீர அதி சூரர்கிளை வேர்மாள வேபொருத திரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி வீரைநகர் வாழ்பழநி வேலாயு த்ர்வமரர் பெருமாளே. (23) 123. வீணர் உறவு அற தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன தான தானதனத் தந்த தானன தனதான பாரி யானகொடைக் கொண்ட லேதிரு வாழ்வி சாலதொடைத் திண்பு யா எழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக அபிராம. பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள் சில ஞாலவிளக் கின்ப 4சீவக பாக சாதனவுத் துங்க மானத எனவோதிச் சீர தாகஎடுத் தொன்று மாகவி பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை சிறு வார் கடையிற் சென்று தாமயர் வுறவினே. 1. வாரி - செல்வம். 2. கவி - தழைப்பு. கடல். 3. பாரி. கடை எழுவள்ளல்களில் ஒருவன். முல்லைக் கொடி தன் தேரைத் தடுக்க அது வேண்டிற்றாகக் கருதித் தனது பெரிய தேரை அதற்குக் கொடுத்தவன்; (சிறுபாணாற்றுப்படை - 89 91) கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினும் கொடுப்பாரிலை" (சுந்தரர் தேவாரம் திருப்புகலூர்) 4. சீவகன் - சீவக சிந்தாமணிக் கதாநாயகன்.