பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 291 வாருங்கள் எனக் கூறி ஒருவரும் மனம் நோகாத வண்ணம் ஆலகால விடத்தைச் சிவபிரான் பெறும்படி தந்து, தேவர்கள் யாவரும் வாழ அமுதை அத் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்த மஹாமாய மூர்த்தியாம் (திருமாலுக்கு) இனிமைதரும் மருகோனே! மேகத்துக்கு ஒப்பான கொடைப்பெருமை வாய்ந்த நாயகத் தல்ைவனும், தனது செல்வத் தழைப்பை (நிறைவை) (அல்லது செல்வக் கடலை), வாயு வீசுவதுபோல விரைந்தளிக்கும் கொடைத்திறங் கொண்ட கர்ங்களை ЭD_GDOL_Ш பாரிவள்ளல் போன்றவனும், சிறந்த மன்மதவேள் போன்ற அழகனுமான கலிசையில் வாழும் காவேரி சேவகனுடைய உள்ள்த்தில் வீற்றிருக்கும் - வீரனே! பெருஞ்சூரர் சுற்றத்தையெல்லாம் வேரோடு மாளப்போர் செய்த திரனே! குமரனே! குவளை மலர்கள் மலரும் ஒடை சூழ்ந்த கழனிகளை உடைய வீரை நகரில் வாழ்கின்ற பழநிவேலாயுதனே! தேவர் பெருமானே! (அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே) 123 பாரி வள்ளல் போன்ற கொடை மேகமே! இலக்குமி வாசம் செய்யும் பெரிய மாலையைப் புனைந்த திண்ணிய புயங்களை உடையவனே! ஏழு லோகங்களிலும் எட்டியுள்ள புகழைக் கொண்ட நாயகனே! அழகனே! பாடவல்ல புலவர் கூட்டத்துக்கு என்றும் வாழ்வை அருளும் சில ஞால விளக்கே (நல்லொழுக்கம் வாய்ந்த பூ மண்ட்ல விளக்கே) இன்பம் தரும் ஜீவகனே! நீே உயர்ந்த அரசே! என்றெல்லாம் கூறி - சீராக எடுத்தமைத்து ஒர் அருமையான பாடலைப் பாடினாலும் இரங்காமல் மொழிகளைச் சீறி உரைப்போரது கடைவாயிலி ற்சென்று தாம் சோர்வு அடையும்படி வீணாக -