பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 293 செம்மை வாய்ந்த பாமாலை வகைகளைக் கொண்டுபோய், அறியாமலே, நிலப் பிளப்பிற் கொட்டுவதுபோலக் கொட்டி இறைந்து வீணாகச் சிந்திவிடுவோர் சிலர் - (இரப்போர்க்குத்) தூரநிற்பவரும், இரப்போரிடம் இரக்கம் சிறிதும் மனத்திற் சிந்திக்காதவர்களுமான மாக்களுக்கு அருகே சேரலாமோ (சேரக்கூடாது - என்றபடி). நிறைந்த நீருள்ளதான கரிய மடுவின் முதலையின் பெரிய வாயில் நேராக அகப்பட்டு அன்று மூலமே என்று பேரொலி செய்த மத யானை (கஜேந்திரன் பிழைக்கும் வண்ணம் அருளிய மாயவன் - ஆதி நாராயணன், நல்ல (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கத்தை ஏந்திய கையன், துதிப்போரது உள்ளத்தில் வீற்றிருக்கும் அன்பன், மாதவன், யாவர்க்கும் இனிய பிரமனது நல்ல தந்தை (அல்லது) மகா தவனாகிய பிரமனின் தந்தை இலக்குமியை (மார்பகத்தே) கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே! வீரம், பராக்ரமம், உக்கிரம் உள்ள தெய்வக் குமாரனே! பன்னிரு அழகிய செங்கை நாயகனே! வீசுங் கலாப மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே! விளங்கம் காவிரியைத் தன்னிடத்தே கொண்ட (கலிசையூர்த்) தலைவனான பராக்ரமனுடைய (கலிசைக் காவேரி சேவகனுடைய) நல்ல மனத்தில் வீற்றிருக்கும் (பெருமாளே)! விரையில் வீற்றிருக்கும் L_I ក្ញុំ (பெருமாளே)! சிறந்த தேவர் பெருமாளே! (மனதிற் சிந்தியார் அருகு உறலாமோ) 124 வரிசையாய் நின்று, சமீபித்து, திண்ணிய மனத்தினராம் (Gର 鷺 மகளிர்) செலுத்தின பார்வையாகின்ற அம்பினாலும், வண்டுகள் மொய்த்துச் சுற்றும் கரும்பு வில்லைப் பெற்ற செல்வத்தனாம் காமன் செலுத்திய மலர்ப் பாணங்களாலும் -