பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) --- - திருப்புகழ் உரை 295 மனநோய் அடைந்து, அறிவு போய், கேடு உற்று இயமனை அடையச் செய்யும் அத் (தீய) குணங்களையே அடைந்து (இவ்) வுயிரானது மாண்டு போம் (இவ்வாறு வரும்.) பிறவிக் கடலினின்றும் நீங்கி உயர்ந்த நல்ல கதியை (நான்) பெறுவதற்கு (உனது) திருவருளைத் தந்தருள வேண்டும். வேங்கை மரத்தின் நல்ல உருவை எடுத்து மலைக் கன்னியாகிய வள்ளியை (அடைய) நினைத்து (அவளிடம்) நின்றவனே! தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை - அவன் பிரணவப் பொருளுக்கு உரை சொல்ல மாட்டாமைக்காகச் சிறையில் வைத்தவனே! பாம்பையும், (கங்கை) நீரையும் அணிந்துள்ள அந்தப் பரமசிவன் பரவித் துதிக்க், (அவரிடம்) அன்பு பூண்டு ஒப்பற்ற (உபதேசச்) சொல்லைச் சொன்னவனே! பவள நிறம், வெண்ணிறம், பொன் நிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த பழநியிற் குமரப் பெருமாளே! (நற்கதியைப் பெறுதற் கருளைத் தரவேணும்) 125 இரண்டு சிமிழ் போலவும் மலை போலவும் (தோன்றி) வட்ட வடிவின்தாய் இளகிப் புளகங் கொள்ளும் பெண்களுடைய (அல்லது.அழகிய) இடைக்கு அழகிய சுமையாக உள்ள (அல்லது இடையின் சுமையாக உள்ள மாதர்களிடம்) நட்புப் பூண்டு நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ (அவர்கள்) ன்ற உடல் இன்பத்தை அடைந்து (அவர்தம்) இதழ் நீரை உண்டு (அவர்களைத்) தழுவி, மணங்கமழும் பாய்லின் மேலே - சரச லீலைகளைச் செய் செய்து, கொ ந்சிப் பேசி, உள்ளம் களித்துத் தவநிலையை 魏."嶽 து திரியக் கடவேனோ?