பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 முருகவேள் திருமுறை 13- திருமுறை 'சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் பரிவாலே, சீசநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யபுலஸ்த் யசநற் குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச் "சதுபத் துநவப் புலவர்க் கும் விபத் தியில்ஞான, படலத் துறுலக் கணலக் ய? தமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்விருத் தியிலைப் 'பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் குருநாதா. பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற் றலையிற் குலையிற் பலமுற் றுதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில் நிற் குமரப் பெருமாளே. 1. இறைவன் ஆணைப்படி முருகவேள் மதுரையில் வணிகர் குலத்தில் ருத்ர ஜன்மர் என்னும் பெயருடன் ஊமைப் பிள்ளையாய் உதித்து 'இறையனார் அகப்பொருள்' என்னும் நூலின் உண்மைப் பொருளைச் சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதிமரும் உணரும்படி வைத்து, அவர்களுடைய கலகத்தைப் போக்கின திருவிளையாடல் இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவைத் திருவிளையாடற் புராணத்திற் சங்கத்தார் கலகத் தீர்த்த திருவிளையாடலிற் காண்க 2. சநகர்க்கும் என்பது முதலாகக் கூறிய இவர்களே சநகாதி நால்வர். 3. மெய்ப்பலகை - சங்கப் பலகை 4. சது பத்து நவப் புலவர். சங்கத்தார் நாற்பத்தொன்பதின்மர். 5. விபத்தி யில் வேற்றுமை யில்லாத 6. தமிழ்த் த்ரய மத்தில். தமிழ்த்திரயம் அதில் (முத்தமிழில்) 7. பழுதற்று. பழுதற. குறிப்பு : விநாயகர் துதியில் விநாயகரை " முத்தமி ழடை வினை...முற்பட எழுதிய முதல்வன்" என்றார்; இங்கே முருகக் கடவுளை "தமிழ்த் த்ரயத்து அகப்பொருள் வ்ருத்தியினை உணர் வித்தருள் வித்தக சற்குருநாதன்" என்றார். இவற்றால் தமிழ் மற்ற மொழிகள் போலாகாது ஆதியாவுள்ள தெய்வமொழி யென்பதும், அது கடவுளரெல்லாம் பயின்றுள்ளது என்பதும் வெளியாகின்றன.# (தொடர்ச்சி பக்கம் 299, 300,301-ல் பார்க்க)