பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி) திருப்புக உாை | Is பெருந்திய பல கொண்டு (வழிபட்டும்), சிறப்பித்துக் கூறும் தோத்தி ! சொற்கள் கொண்டு (துதித்தும்), து.ாக்கிய கைகளால் (குழை,) :: ப் பிடித்துக் கொண்டு தோப்பணம் குட்டு (முதலியன) செய்தும், அவரது தாமரை போன்ற சிலம்பு அணிந்த அழகிய பதங்களில் அர்ச்சனை (செய்வதை) மறவேன்; தெனன தெனதென தெத்தென எனப் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்த மாமிசக் குடல், நெருங்கிய மூளை, நிரம்பிய அவ் வயிற்றில் நிறைந்து மிக்க குடல் வரிசைகள், ஒலி-இவை நிறைந்த (போர்க்) களத்திலே திமித திமிதிமி (என ஒலிக்கும்リ மத்தளம், இடக்கை என் னும் வாத்தியங்கள் செக சேசே என ஒலிக்க, துகு துகு துத் என்னும் ஊது குழலுடன் உடுக்கைப் பறைகள் இடியென மிக ஒத்து முழங்க், டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள ஒசைகள் எழ (ஒன்றோடொன்று) பகைத்த பேய்கள் கைப்பறை கொட்ட, Tলকতা பயிரவி (என்னும் தேவதை போர்க்களத்தில்) சுற்றிக் கூத்தாட எதிர்த்து வந்த அசுரர்களை அழித்தருளிய பெருமாள்ே! (உனது திருவடி முதலானவற்றைக் கருதும் அறிவைப் பெறவேண்டிக் கணபதியை அர்ச்சிக்க மறவேன்)