பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 317 135 கருதிய ரத்னாபரணங்களையும் ஆடைகளையும் (முறையே) சரிப் படுத்தி உடுத்து, இருண்ட கூந்தலைக் கலைத்து, முடித்து, வெற்றிலைப் பாக்குப் பிளவுடன் - மெல்லுகின்ற பவளம் போன்ற உதட்டை மடித்து, வேல் போன்ற கண்ணால் நெருக்கி அழைத்து, (காம) மயக்கைக் கொடுத்து, நல்லுணர்வைக் கெடுத்து, நகக் குறியாலே, அடையாளம் இடப்பட்ட கொங்கையில் அணைத்து மனம் கர்வங் கொண்டவராய், (தம்மிடம் வந்தவர்களிடம் உள்ள) கைப் பொருளைக் கவரும் பொருட்டுக் கலவிச் சேர்க்கையிற் கட்டுப் படுத்துகின்ற (பொது) மகளிர் - இடத்தே செலுத்துகின்ற மன மயக்கம் ஒழியவும், கீர்த்தி உறவும், அன்பு கூர்ந்தருளி (உனது) அழகிய திருவடியைத் தந்தருளுக! (தமது) தலைமயிரைப் பறித்து விடும் கள்ள நெஞ்சுடைய சமணக் குருக்களாம் அசட்டுப் பேர்வழிகளுடைய விலா எலும்புகள் முறிந்து விழக் கழுமரங்களில் ஏறும்படி திருநீற்றை (விபூதியை). பரவ வைத்த அந்தத் திருப்பதியாம் மதுரையில் நெருப்பிலும் நீரிலும் பெருமை வாய்ந்த திருப்பதிகம் பொறித்தெழுதப் பட்ட (ஏடுகளைப்) புகவிட்ட திறமை வாய்ந்த கவிராசனே! இட்ட ஏடு வேகாமலும், ஓடுகின்ற நீரில் இட்ட ஏடு ஓடு நீரை எதிர்த்துச் செல்லவும் வைத்த திருஞான சம்பந்தப் பெருமானின் திருப்பதிகங்களின் மேன்மை இங்குப் பாராட்டப்பட்டுளது. சம்பந்தர் முருகவேளின் கூறு என்பது அருணகிரியாரது கொள்கை