பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/335

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 319 நெருங்கி அடர்ந்த சடையில் நிலவை அணிந்த அந்தத் தந்தை (சிவபிரான்) பாராட்டி மகிழ்வான் என்று சிறப்புறும் வகையில் பிரணவத்தை அவருக்கு உபதேசம் செய்த கருணைப் பெருமாளே! விளக்கமுறும் வயலூரில் என்னைத் தடுத்தாட்கொண்டு அடிமை ஆக்கிய அருட் பெருமாளே! திருப் பழநிமலைக் குமரப் பெருமாளே! (பிரசித்த முறத் திருக்கழலைத் தருவாயே) 136 கலவி இன்பத்தில் ஆசைப்பட்டு, பரிந்து நின்று இரண்டு பருத்த கொங்கைகளை விற்பதற்கு ஒருப்பட்டு நிற்கும் வேசையராம் (மங்கையர்களின்) கயல் மீன் போலும் கண்கள் சிவக்கும்படி (அவர்கள்மீது) அன்பு பூண்டு நட்புடன் இன்பத்தில் அழுந்தி (கொவ்வைக்) கனி போலும் இதழ் (அமுதத்தை) பருகிப் பருகி (அடிக்கடி உண்டு), அச்செயல்களால் வரும் தன் வசம் இழத்தல் அதிகப்பட்டு (காம லீலைகளிலேயே) பொருந்தி இன்புறுகின்ற குழப்பங்களை உண்டுபண்ணிக் கூடி நெருங்கி அணைகின்ற கட்டிலின் மேல் குலவுகின்ற நல்ல கைகளோடும் அங்கு அணைந்து கொடி போலும் இடை துவள, குளிர்ந்த மேகம் போன்ற கூந்தற்கட்டு அவிழ, முன்பிருந்த உடற் பொலிவு வேறுபட -