பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழதி திருப்புகழ் உரை 325 பூமியிலே பிறந்து, குழந்தை எனத் தவழ்ந்து, அழகு பெறும் வகையில் நடை பழகி, இளைஞனாய் - அரிய மழலைச் சொல்லே மிகுந்துவர, மழலை மொழிகளையே பேசி, அதிக விதமாக (வயதுக்கு ஒப்ப) வளர்ந்து (வயதும்) பதினாறு ஆகசைவ நூல்கள், ஆகமங்கங்கள், மிக்க வேதங்கள் இவைகளை ஒதுகின்ற அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து போற் றாமல் - மாதர்கள் மீது ஆசை மிக்கு (அதனால்) மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை உனது (திரு) வடிகளிற் சேர்த்தருளுக; "சும்மா இரு" என்னும் மவுன உபதேசத்தை (சனகாதி நால் வர்க்குச்) செய்த சம்பு, திங்கள் - அறுகு (கங்கை) நீர் தும்பை இவைகளை அழகிய முடியின்மேல் அணிந்: துள்ள மகாதேவர் - மனம் மகிழும்படியாக அவரை அணைந்து அவரது ஒரு புறத்தில் (இடது புறத்தில்) இடங் கொண்டுள்ள மலை மகளாம் (பார்வதியின்) குமாரனே! பரிசுத்தமான கூர் வேலனே! திருவுலா வர விரும்பி மயிலின் மேல் ஏறி விளங்கி உலகு அதிர வலம் வந்த கழல் வீரனே! மோகூ வீட்டிற் பொருந்தி விளங்கும் முருகன் என அமர்ந்து, மகிழ்ச்சியுடன் பழநிமலை மேல் அமர்ந்த பெருமாளே! (அடியேனை உன்றன் அடி சேராய்) 139 உலகத்தில் உயிர், பாசம், சம்பந்தப்பட்டதான உறவினராம் சுற்றத்தார், தாய், தந்தை, மனைவி, மக்கள் -