பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 முருகவேள் திருமுறை (3- திருமுறை மலசலசு வாச சஞ்ச லமதாலென். மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய், சலமறுகு பூளை தும்பை #. யணிசேயே. சரவணப வாமு குந்தன் மருகோனே; பலகலைசி வாக மங்கள் பயில்வோனே. பழநிமலை வாழ வந்த பெருமாளே (40) 140. அரகர சிவாய எனக் கூற தனதனன தான தந்த தனதனண தான தந்த தனதனன தான தந்த தனதான கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து கலைகள்பல வேதெ ரிந்து மதனாலேகரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து கவலைபெரி தாகி நொந்து மிகவாடி, அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று 'அறுசமய நீதி யொன்று மறியாமல். அசனமிடு வார்கள் தங்கள் மனைகள் தலை வாசல் நின்று அநுதினமு நாண மின்றி யழிவேனோ, உரகபட வேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர் உலகளவு மால்மகிழ்ந்த மருகோணே உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க உறை (புகலி யூரி லன்று வருவோனே; சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்தியம், கெளமாரம் என்பன ஆறு சமயங்கள். சைவம் - சிவனைப் பர தெய்வமாகக் கொள்ளும்,வைணவம்-திருமாலைப் பரம்பொருளாகக்கொள்ளும் சாக்தம் சத்தியைப் பரதேவதையாகக் கொள்ளும், செளரம் சூரியனை வழிபடும் சமயம் காணா பத்தியம் - கணபதியை முதற் கடவுளாக வழிபடும் சமயம், கெளமாரம் - முருகக்கடவுளைப் பரம்பொருள் என்று வழிபடும் சமயம். tபுகலியூர் - சீகாழி,