பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 முருகவேள் திருமுறை 13- திருமுறை பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா. பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. (41) 141. ஞானம் பெற தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதான சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து சுரதக்ரியை யால்வி ளங்கு மதனுாலே. சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு தொழிலுடைய யானு மிங்கு னடியார்போல்; அருமறைக ளேநி னைந்து மதுநெறியி லேநடந்து அறிவையறி வால றிந்து நிறைவாகி. அகிலபுவ னாதி யெங்கும் வெளியுற மெய்ஞ் ஞான இன்ப அமுதையொழி யாத ருந்த அருள்வாயே! பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப னிந்து 'பரிதகழை யாமுன் வந்து பரிவாலே. பரவியவி பீஷணன்பொன் மகுடமுடி சூட நின்ற படைளுரொடி ராவ னன்ற னுறவோடே, எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட ரகுபதியி ராம சந்த்ரன் மருகோனே. இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த இமையவள்த னால்ம கிழ்ந்த பெருமாளே. (42) .. பரித கழையா முன் - பரிவு தக அழையாமுன் அன்புடன் அழைககுமுன.