பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/346

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 முருகவேள் திருமுறை 13. திருமுறை 142. ஆண்டருள தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதான. வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயி றில்நெடு நாள லைந்து புவிமீதே. மனிதருரு வாகி வந்து அதுதினமு மேவ ளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வழியில்மிக வேயு ழன்று கணிவதுட னேய ணைந்து பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற னருள்தாராய், புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியிதழுற லுண்ட புலவோனே. பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த வடிவேலா; பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த பெருவாழ்வே. பகையசுரர் மாள வென்று அமரர்சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற பெருமாளே. (43) 143. பிறப்பு இறப்பு அற தனதனன தந்த தந்த தனதனண தந்த தந்த தனதனண தந்த தந்த தனதான மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி 'மதியொடுபி றந்து முன்பெய் வதையாலே 1. மதியொடு - மதிபோல.