பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 முருகவேள் திருமுறை 13. திருமுறை வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் வடிவாகி, இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி யசடாகும். இருவினையொ திந்த இந்த ஜனனமரணந்து றந்து னிணையடிவ ணங்க என்று பெறுவேனோ, திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை நெகிழாத திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன. றிந்து வென்ற பொறியாளர்; பேரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் மருகோனே. பதுமமிசை வண்ட லம்பு சுனை பலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த பெருமாளே. (44) 144. அழுது புகழ் சொல்லும் அருளைப் பெற தனதனன தனண தந்த தனதனன தனண தந்த தனதனண தண்ன தந்த தனதான விரைமருவு மலர ணரிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரிய மின்ப மடவார்பால்; 1. நெகிழா - நெகிழவிடாத 2. நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேர புத்திரர் இருவரும் மதுபானஞ் செய்து ஜலக்ரீடை செய்து ஆடையின்றி நாரதர் முன்னிலையில் இருந்ததால் மரம்போல நிற்கும் நீங்கள் மரங்களாவீர் என அவரால் சபிக்கப்பெற்றனர் . அவர்களும் மருத மரமாயினர். உரலிற் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து இந்த இரட்டை மருத மரத்தின் நடுவிலே செல்ல, மரங்கள் இரண்டும் முறிந்து விழுந்தவுடன் இருவரும் சாபம் தீர்ந்து, கண்ணனைப் பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சிச் சென்றனர் - என்பது வரலாறு.