பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 333 வந்த வகையை மறந்து, எழுந்து முலையுண்டு அழகிய குழந்தையாக வளர்ந்து, மலைபோன்ற பருத்த வடிவை அடைந்து, பெருத்த (காம) மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடு க்ளிற் புகுந்து இரவும் பகலும் (அதே வேலையாயிருந்து) ஒடுங்கி மூடனாகும். நல்வினை தீவினை இரண்டும் மூடிய இந்தப் பிறப்பு இறப்பு என்பவற்றை விட்டு உன் இணையடிகளை வணங்கும் பேற்றை என்று பெறுவேனோ! இலக்குமியாம் சீதையுடன் (அயோத்தி நகரை விட்டு நீங்கி, இருள் சூழ்ந்த் காட்டில் நடந்து இலங்கையை விளங்கும் எரிக்கு (இரை) இட்ட குரங்காம் அதுமனைக் கைவிடாத தீரமுள்ள பூரீராமர், கஞ்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கூர்மையாக உணர்ந்து (அவைகளை) வ்ென்ற அறிவாளர், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும் பர்ம பதத்திலிருக்கும் நண்பருமான திருமாலின் மருகனே! தாமரையின்மீது வண்டுகள் ஒலிக்கின்ற சுனைகள் பல விளங்கும் பரிசுத்தமான பழநிமலை மீது அமர்ந்த பெருமாளே! (ஜனன மரணம் துறந்து...வணங்க என்று பெறுவேனோ.) 144 மணங் கமழும் மலர்களை அணிந்த கரிய, சுருள் உள்ள கூந்தல் சரிந்து விழ, முகம் திங்கள் போல விளங்க, அதிக காம மயக்கத்தைத் தரவல்ல - கண்புரள, முலை குலுங்க, மொழி குழற, படுக்கையிற் புக்கு காம மோகச் செயல்கன்ளச் செய்யும் இன்ப மாதர்களிடத்து,