பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 13- திருமுறை இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த இருளகல வுனது தண்டை யணிபாதம். எனது தலை மிசைய ணிந்து அழுதழுதுனருள்வி ரும்பி யினியபுகழ் தனை விளம்ப அருள்தாராய்; அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே. அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட அமரர்சிறை விடுப்ர சண்ட வடிவேலா! பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர்சடையர் விடைய ரன்ப ருளமேவும். பரமரரு எளியக டம்ப முருக அறு முகவ கந்த பழநிமலை தனில மர்ந்த பெருமாளே (45) 145. அகப்பொருள் நற்றாயிரங்கல் தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதனன தனதனன தானான தனதனன தனதான இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைக ளொரு நாலேவ விருதுகுயி லது கூவ. எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென இகல்புரிய மதன குரு வோராத அணையர்கொடு வசைபேச; 'அழுதால் உன்னைப் பெறலாமே - திருவாசகம் - சதகம் - 90. 1. கொல்லும் குணமுடைய ஐந்தாவது பாணம் தவிர, ஏனைய பா ணங்கள் நான்கு பாடல் 19ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க. நீல அம்பொன்' றாழிய நின்ற நாலம்பு செயும் சிலமுங்கண் டெவ்வெவர்க்கும் செப்புவாள் பூவண நாதர் உலா - 424, 2. குரு - பாரம்.