பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழ் உரை 23 2 பொன் திரண்டுள்ள பெரிய மலையாகிய மேருமலையை தகன் தகன் என்று ஒளி மிக (வீசும்) செண்டை எறிந்து (அடித்த) திறலோனே! மதம் மிக்குப் பல வகையிற் புணர்வதும், கவளமாக உண்டு வளருவதுமான கரி (உருவங்கொண்ட கணபதி)யின் துணைவராகத் (தம்பியாகப்) பிறந்த முருகோனே! பாம்பின்மீது துயில்கின்ற திறம் வாய்ந்தவரும் கடலை முன்பு கடைந்தவருமான பரம்பொருளும் பரந்த மேக (நிறத்தவருமான) திருமால் அன்புகொள்ளும் மருகனே! பல துன்பங்களிற் சுழற்சியுண்டு கலங்கிய சிறியனும், புலையனும், கொலைஞனுமான நான் செய்த பாவமெல்லாம் இன்றோடு கழிய வந்தருள்புரிதி: 1. நாட்டில் மழையிலாமையால் உயிர்கள் வருந்துவதைக் கண்டு உக்கிர பாண்டியன் (முருகன் கூறு) வருந்த அவன் மகிழும்படி சொக்ககநாதர் அவன் கனவில் தோன்றி "நாம் முன்பு உனக்குத் தந்த செண்டு கொண்டு மேரு மலையை அடித்தால் அது உனக்கு வேண்டிய பொன்னை உதவும்” எனப், பாண்டியன் அவ்வாறே சென்று மேருவைச் செண்டாலடித்துப் பொன் பெற்ற திருவிளையாடல் இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணம் - 15 ஆவது மேருவைச் செண்டால் அடித்த திருவிளையாடல். * செண்டு - தலைப்பு வளைந்த பிரம்பு போன்ற கருவி. இதன் விவரத்தை டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியுள்ள நினைவு மஞ்சளி முதற்பாகம் பக்கம் 20.1 ல் பார்க்க