பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 391 சிவந்த கதிரொளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய சிவ சரவணபவனே! திருவிளையாடல்கள் புரிபவனே! கூட்டமான நகஷத்திரங்களுக்கு நாயகனான சந்திரனையும் கொன்றைமலரையும், அணிந்த சடையை உட்ைய சிவனும், கங்கையும், அழகிய - பழைய நிர்மலியாம் பார்வதியும் அளித்தருளிய (பெற்ற) மழலை :: உடைய குழந்தையே! பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்ே! 169 நற்கதியை அடையமுடியாத வண்ணம் தடுக்கின்ற (பொ து) மகளிரின் புதிய ரத்னாபரணங்கள் அணிந்துள்ள கனத்த கொங்கை மலைமேல் மிகுதியாக வைத்த ம்ய்க்க அறிவர்ல் உண்டான - ". *. கவலைகொண்ட மனத்தை(நான்) உடையவனாயிருந்த போதிலும், உனது பேர்பெற்ற தங்க நிதி போன்ற திருமேனியையும், முகங்கள் ஆறினையும்அதிக பலங்கொண்ட வைரமணி போலத் திண்ணிதான திருப்புயங்களையும், கூரிய ՓԱՌԱՄ #2 (oN_LI §ಘj பாம்பைப் င္ဆို႔ေရြ႕ துள்ள கலாப மயிலையும், உலகு ஏழும் - அதிரும்படியாகக் கூச்சலிடும் கோழியையும்.அடியார்கள் போற்றி நல்வாழ்வைப் பெறும் (என்றும்) புதிய தாமரை மலரன்ன திருவடியையும் மற்க்கமாட்டேன்; சூரிய சம்பந்தமுள்ளவனாய், ரஜோ குணம் கொண்டவனாய் (அண்ணன் வாலியுடன்) எதிர்த்துத் தோற் று நின்ற கொடிய போர்க்களத்தில் சுத்த வீரம் வாய்ந்த குணத்தினனான - தம்பியாகிய சுக்கிரீவனுக்குப் பெரிய அரசாட்சியைப் பெற்று வாழுமாறு அன்புடன் உதவிபுரிந்த ராகவன் (பூனி ராம பிரானின்) மருமகனே!