பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 403 ஒருத்தனாகும்படி (உனது) திருவருளினால் உணர்ச்சிகூடும் நாள் - அடிமைக்கும் கிடைக்குமோ! பருத்த மயில்மீது வரும் முருகனே! விரிவாக இயற்றமிழை உணர்ந்த வயலூரனே! திருந்திய பெரிய தவத்தினர் புகழ்கின்ற குருநாதனே! திருக்கையில் வேல் ஏந்தும் அழகிய பெருமாளே! ( "ஒருத்தனாம் வகை அடிமையும் உடையேனோ) 174 தாம் கற்ற கலை கொண்டு பெளத்தர்களும், விரும்பிய தன் சாதிக்கு உரியனவாய்ச் சாஸ்திரம் ് கிரியைகளைச் செய்வதே நியதி என்பவர்களும், முகமதியர்களும், மாயா வாதத்தினரும், கபிலரும், சொல்லப்பட்ட் அந்தக் கணாதர்களும், உலகாயதர்களும் - கலக்கத்துடன் தருக்கம் புரிபவரும், வாம மதத்தினரும், பயிரவரும், தம்மோடு மாறுபட்ட கொள்கையரோடு கலகல என்னுங் கூச்சலுடன் அதிக விதமான நூல்களின் மேற்கோள்களுடன் -

  • ஒருவனாதல் - "தான் ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியனாய்க் கேடின்றி" ஆதல் - (திருமுருகாற்றுப்படை நச்சினார்க் கினியர் உரை).

7. வாமம் - அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும், சத்தியுடன் லயித்தலே முத்தி யென்றும் கூறும் மதம். 8. பைரவம் - சைவசமய வகைகளுள் ஒன்று. பைரவர் அவ்வகையை மேற்கொண்டவர். வாமமும் பைரவமும் உட்சமயம் ஆறினுட் சேர்ந்தவை. அவைதாம் வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம், புறச்சமயம் ஆறு:- உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டா சாரியம்.