பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/421

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி திருப்புகழ் உரை 405 சண்டையிட்டு, எதிர்தாக்கி, வாது செய்தும், ಕಣ್ಣಿ! உண்மை இதுதான் என்று தெரிதற்கு அரிதான சித் (விடு) தரும் பொருளான உபதேசத்தை - (யான்) அறியும்படி விளக்கி ஞான தரிசனத்தையும் அருளி மேம்பட்ட உனது திருவடியை எனக்குத் தந்தருளும் நாளும் ஒன்று உண்டோ - கொலைகள் நேரும்படியாக எதிர்த்து வந்த கோரமான யானை முகங்கொண்ட அரக்கனாம் தாரகனுடன், குதிரை முகத்தர், சிங்க முகத்தர் ஆய (பல) வீரர்களின் - குறைபட்ட உடலை எடுத்து வீசிப் பேயும், பத்ரகாளியும் மகிழ்ந்து களிக்க வெற்றி வேலைச் செலுத்தினவனே! நல்ல விளைவுகொண்ட (தினைப்) புனத்தில் உலவி நின்ற குறப்பெண் (வள்ளியின்) அழகிய, கனத்த நறுமண முள்ள கொங்கையிற் பொருந்திய அழகிய மார்பனே! ஒன்றோடொன்று) போரிட்டு மிக்கெழுந்த பெண் குரங்குகள் (அல்லது கருங் குரங்குகள்) மழையைத் தரும் மேகத்தின் பொருட்டு (அஞ்சி) ஏறி (ஒளிக்கும்) பழநிமலையில் வீற்றிருக்கும் (பெருமாளே!) தேவர் பெருமாளே! (திருவடி எனக்கு நேர்வதொரு நாளே!) 175 பொற்குடம் இரண்டுக்கு ஒப்பான மலையென்று சொல்லும்படி, நெருங்கியுள்ள குரும்பை (தெங்கின் இளங்காய்) போன்று அழகிய களின் ஒளி சிறந்த மாலைகள் விளங்கினவ்ாய், முற்பட்ட சூதான எண்ணத்துடன் (அல்லது முற்பட்டுச் சூதாடு கருவிபோன்ற கொங்கையுடன்), (வீட்டு) வாயிலில் நின்று, பரந்தும், நாள்தோறும் நெகிழ்ந்தும், மேம்பட்டு எழுந்து விளங்கும் அழகிய கலவை யணிந்த குங்குமம் (தயங்கும்) கொங்கை யானையை இன்பத்துடன் -