பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/431

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 445 இந்திர நீலவனத்தில் (இந்திரனது காவலுள்ள இருண்ட காட்டில்) (இருந்த அரக்கர் முதலானோரை எரிக்கு ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தின் மேலோடு வரையும் இருந்த (மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இருந்த) அவுணர்களின் துன்புறுத் ಕ್ಲಿ றும் காப்பாற்றித் தேவர்களுடைய எண்ணத்தக்க (எண்ணி வருந்தத்தக்க) துன்பத்தை அகற்றி உதவிய ஒரு பேடியாகிய அருச்சுனனுடைய - அழகிய தேரைச் (சாரதியாய்) நடத்திச் செவ்விய குருமண்டல நாட்டைப் (பாண்டவர்க்கு) அளித்து, அப்பாண்டவ ஐவரின் தோழமையை (நட்பை)ப் பூண்டிருந்த தலைவ்னாம் திருமாலின் மருகனே! சந்திரன், சூரியர், திக்கு எட்டு இவை யாவும் 皺 முடிவிலா வாழ்வையுற்று விளங்கும் சிவனாரது ச்ெவியிற் புகும்படி செம்பை (உபதேசத்தை) அருளிய குருநாதனே! சிறப்புற்ற குறத்தியின் (வள்ளியின்) இன்பம் பொலியும் கொங்கையை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே! தண்ணிய தமிழ் வழங்கும் பழநியில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே! (சிங்கிகொள் மங்கையராசை விலக்கிப் பொன் பதம் அருள்வாயே) 179 ஞான நிலையை மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்றும் பொறிகள் (இந்திரியங்கள்) கூடப்பெற்று - ஐம்புலன் களும் ஞான நிலையை நாடி நிற்ப்தாய் வானில் உள்ள சந்திர சூரியர்கள் இல்லாத தேஜோ மண்டல பூமியை அடைந்து (உள்ளொளியாகிய் 'பரீ நந்தி ஒளியைக் காணப்பெற்று), நமசிவாய' என்னும் ந்தெழுத்தை ஒதுவதால் அடையக் கூடிய உச்சி லையை அடைந்து -

  • நந்தி ஒளி - திருப்புகழ் 39 குறிப்புரை பார்க்க. " சுடரிலகு மூலக ஒளி" என்பது இது - திருப்புகழ 637.