பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 449 இட்ட கூட்டுறவால் (ஈற்றில்) கரியாவதன்றி இந்த ரசவாதத் தால் வரும் பயன் ஏது? (ஒன்றுமில்லை என்றபடி). மெய்யனே! வேதத்தை ஒ துகின்ற பிரமனும், திருமாலும், சகல ஆகமங்களும், நூல்களும் கண்டறியாத பரதேவதையாகிய பார்வதி அருளிய குழந்தையே! பழனாபுரியில் வாழ்கின்ற பெருமாளே! (வரதா! மணி நீ என, வருகாதது எது?) 193 வாதம் (உடலில் வாயு மிகுதலாலாகிய நோய் வகை), பித்தத் தால் வரும் பிணி வகை (ஈரலினின்றும் தோன்றும் நீர் - பித்தம்) மிடா (பெரிய பானை) போன்ற வயிறு, கோழையால் வரும் கூடியநோய் வகைகள், சீதமல நோய், பல்நோயால் வரும் சன்னி, சூலைநோய், (வயிற்றுளைவு முதலிய நோய்), மகோதரம் (பெரு வயிற்று நோய்), நேத்திர ரோகம் (அழகிய கண்களில் உண்டாகும் நோய்கள்), பெரிய மூலநோய்கள் (ஆசனத் துவாரத் திற் காணும்; நோய்கள்), (சுரக்) குளிர் கோழையால் வரும் இழுப்பு (சுவாசகாசம்) - அடுத்தடுத்து வரும் வாந்தி முதலிய சில நோய் பிணி வகை களுடன், தொண்ணுாற்றாறு தத்துவக் கூட்டத்தாரின் சூழலில் வாழ்கின்ற வஞ்சகர்களும், பேராசைக்காரரும் (ஆய ஐம்புல வேடர்களால்) - சூழ்ந்துள்ள பொல்லாத விசித்திரமான தேக ஆசையால், மண் - பெண் - பொன் என்னும் மூவாசையுங் கொண்டு எந்த (நல்ல) பொருளையும் சற்றேனும் உணராமல் மாயையே விளைக்கின்ற கள்ளத்தனமும் பொய்ம்மையுமே கொண்ட இந்த உடலே சுகமெனக் கருதி இவ்வுடலைப் போற்றி விரும்பி -