பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/482

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 9 (தமது) ஆடையைத் தளர்த்தியும், அரையில் சுற்றியும் உடுப்பவர், காசு பறிக்கவேண்டி (தம்மிடம் வருபவரைப் பல விதத்தில்) தடுத்துச் சேர்பவர்கள், வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர் (இத்தகைய விலை மாதர்களின்) உறவு ஆமோ! (ஆகாது என்றபடி) மாமரம் போன்ற உருவத்துடன் கடலுள் நெருக்கி நின்ற சூரனைச் சங்கரித்து, அவனது மாமிசக் குடலைக் கொடிவாரணம் (கோழிக் கொடி) மகிழும்படி கொடுத்த) (அல்லது காக்கைகளும் கோழிகளும் மகிழும்படி கொடுத்த) வேலாயுதத்தை ஏந்திய குகனே கதிர்காமம் எனப்படும். சிறந்த மலையிலும், பழநிப் பதியிலும். தனிச்சயம் என்னும் தலத்திலும், தணிகை மலையிலும், (திருப்) பரங்குன்றம் என்னும் சிறந்த மலையிலும், கடல் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச்செந்தூரிலும், இன்பந்தரும் ஒளி வீசும் பல மலைகளிலும் குன்று தோறாடல்களிலும்), நல்ல பதினாலுலகங்களிலும், பொருந்தி யிருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அதை (நினைத்த வரங்களையெல்லாம்) நிரம்பக் கொடுத்தருளும் இளையவனே . ஏரகமலை யென்று சொல்லப்படும், அற்புதம் நிறைந்த சுவாமிமலை என்னும் ஊரில் பிரியப்பட்டு இருக்கின்ற சித்த மூர்த்தியே! 輩 ராஜத லகூடிணம் நிறைந்தவளாயுள்ள லட்சுமி (பார்வதி) பெற்றருளிய பெருமாளே! (தோதக வித்தை படித்து நடிப்பவ ருறவாமோ)

  • சத்துவம், இராசதம், தாமதம் எனப்படும் முக் குணத்திலொன்று ராஜதம், அது ஊக்கம், ஞானம், வீரம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி என்னும் எட்டுக் குணம் உடையது.